நித்ய நிதி திட்டம்
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கியும் ஒன்றாகும். தற்போது, சிண்டிகேட் வங்கியும், கனரா வங்கியும் இணைக்கப்பட்ட பிறகு பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு முன்னணி பொதுத்துறை வங்கிகளின் இணைப்பும் நித்ய நிதி திட்டம் போன்ற சில திட்டங்களையும் ஒன்றிணைக்க வழிவகுகிறது.
இந்நிலையில், 01.04.2020 முதல், பழைய சிண்டிகேட் வங்கியின் பிக்மி டெபாசிட் திட்டம் மற்றும் கனரா வங்கியின் புதிய நித்ய நிதி டெபாசிட் (NNND) திட்டம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு NITYA NIDHI DEPOSIT (NND) திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனரா வங்கியின் ஒன்றிணைக்கப்பட்ட நித்ய நிதி திட்டம் சிறு சேமிப்புகளை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் இந்தக் திட்டதின் கணக்கைத் திறந்தால், வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் உங்கள் வசதிக்கேற்ப தினசரி அல்லது குறைவான இடைவெளியில் உங்கள் சிறு சேமிப்பு பணத்தை உங்கள் வீட்டு வாசலில் சேகரித்து வரவு வைப்பார். நீங்கள் நாள்தோறும் வங்கி செல்ல அவசியமில்லை.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 63 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள் 3 மாதங்கள் ஆகும்.
கனரா வங்கியின் நித்ய நிதி திட்டக் கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு முதிர்வு காலத்தில் 2% சதவீதம் வட்டி வழங்க படுகிறது.
தினசரி குறைந்தபட்ச வசூல் தொகை ரூ 50 மற்றும் தினசரி அதிகபட்ச வசூல் வரம்பு ரூ 1000. அதாவது ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ 30000 வரை வரம்பு வைக்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன் டெபாசிட் திரும்பப் பெற்றால் வட்டி விகிதம் மாறுபடும். நித்ய நிதி திட்டதின் கீழ் தொடர பட்ட கணக்கை
12 மாதங்களுக்குள் முன்கூட்டியே மூடினால் 3 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கணக்கு 12 மாதங்களுக்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது.
இந்த திட்டத்தில் சேமிப்பை தொடங்குவதற்க்கு அருகில் உல்ல கனரா வங்கியை தொடர்பு கொண்டு முழு விபரங்களை அறிந்துகொள்ளவும்.
இது போன்ற செய்திகளுக்கு கீழே கொடுக்கபட்ட Group ல் இனையுங்கள்.
JOIN HERE FOR MORE UPDATES - WHATSAPP
JOIN HERE FOR MORE UPDATES - TELEGRAM
Post a Comment
Post a Comment